search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோட்டார் சாலை"

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • தற்பொழுது ஒரு லேயர் மட்டுமே மாநகராட்சி மூலம் போடப்படுகிறது.

    நாகர்கோவில்:

    கோட்டார் சவேரியார் ஆலயத்திலிருந்து ஈத்தாமொழி விலக்கு வரையுள்ள சாலையில் பாதாள சாக்கடை திட்டப் பணிக்காக பைப் லைன்கள் அமைக்கப்பட்டது.

    பைப் லைன்கள் அமைக்கப்பட்ட பிறகு சாலை சீரமைக்கப்படவில்லை.இதனால் சாலை குண்டும் குழியுமாக மிக மோசமான நிலையில் இருந்தது. இந்த சாலையில் மழை நேரங்களில் தண்ணீர் தேங்கியது. இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண மேயர் மகேஷ் நடவடிக்கை மேற்கொண்டார்.

    சாலையின் ஓரத்தில் உள்ள கழிவு நீர் ஓடைகளை சீரமைத்தவுடன் சாலையின் ஒரு புறத்திலிருந்து மறுபுறத்தில் உள்ள கழிவுநீருடன் இணைக்கும் வகையில் ராட்சத பைப் அமைக்கப்பட்டது. இதையடுத்து சாலை அமைக்கும் பணி இன்று நடந்தது.மேயர் மகேஷ் இந்த பணியை தொடங்கி வைத்தார்‌.

    இது குறித்து மேயர் மகேஷ் கூறுகையில் இந்த சாலை ரூ.35 லட்சம் செலவில் சீரமைக்கப்படுகிறது. மாநகராட்சி மூலமாக பணி மேற்கொள்ளப்படுகிறது.

    7 மீட்டர் அகலத்திற்கு சாலை அமைக்கப்படுகிறது. தற்பொழுது ஒரு லேயர் மட்டுமே மாநகராட்சி மூலம் போடப்படுகிறது. உடனடியாக நெடுஞ்சாலை துறை மூலமாக இதற்கு மேல் இன்னொரு லேயர் போடுவதற்கான நடவ டிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது என்றார். சாலை பணி நடைபெற்றதையடுத்து இந்த சாலையில் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஆணையா ளர் ஆனந்தமோகன், என்ஜினீ யர் பாலசுப்ரமணியன், மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி கவுன்சிலர்கள் ரமேஷ் ,பாலசுப்பிரமணியன், அனந்தலட்சுமி, மாணவர் அணி அமைப்பாளர் சதாசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கோட்டார் சாலையில் போக்குவரத்து மாற்றம்
    • ரெயில்வே சாலை முதல் ஈத்தாமொழி விலக்கு வரை சாலை சீரமைக்கும் பணி முதல்கட்டமாக நடக்கிறது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கோட்டார் சவேரியார் ஆலயம் முதல் ஈத்தாமொழி விலக்கு வரையிலான சாலையில் பாதாள சாக்கடை, குடிநீர் குழாய்கள் பதிப்பு போன்ற வற்றுக்காக குழிகள் தோண்டப்பட்டன.

    ஆனால் தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமல் அப்படியே விடப்பட்ட காரணத்தால் சாலை குண்டும் குழியுமாக காட்சியளித்தது. இதனால் அந்த வழியே வாகனங்களில் சென்றவர்கள் கடும் அவதிக்கு ஆளாகி வந்தனர்.

    சாலையை சீரமைக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், சமீபத்தில் மழை பெய்தது. இதனால் சாலை மேலும் மோசமடைந்தது. பல்லாங்குழிகளாக காணப்பட்ட சாலையால் விபத்துக்களும் நடந்து வந்தன.

    இந்த நிலையில் சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கின. முதல் கட்டமாக அந்த பகுதியில் உள்ள வடிகால் ஓடைகள் கட்டும் பணி நடை பெற்றது.நேற்று இரவு முதல் சாலைகள் சீரமைப்பு பணிகள் தொடங்கின.

    இதற்காக அந்த சாலையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து கன்னியாகுமரி மற்றும் அந்த வழியாக செல்லும் வாகனங்கள், ரெயில் நிலைய சாலை வழியாக திருப்பி விடப்ப ட்டன. நேற்று இரவு முதல் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று காலையும் போக்குவரத்து இதே சாலை வழியாகத் தான் இயக்கப்பட்டது.

    ரெயில்வே சாலை முதல் ஈத்தாமொழி விலக்கு வரை சாலை சீரமைக்கும் பணி முதல்கட்டமாக நடக்கிறது.

    ×